தொடரும் நண்பர்கள்

திங்கள், 31 ஜூலை, 2017

மெல்ல தமிழ் இனி துளிர்க்கட்டும்

தமிழா ஏன் இந்த அவசரம்..?

பாரம்பரிய அரிசியை மறந்தாய்
பாசுமதி என்றாய் 
சோதித்த மருத்துவர் சுகர் என்றார்

மூதாதையர் வளர்த்த பசுவை மறந்தாய்
ஜெர்சி பசு என்றாய் 
சொரணை செத்து ஜெர்சி மாடாய்  மாறினாய்

நாட்டு கோழியை மறந்தாய்
பிராய்லர் என்றாய்
உன் உடலில் கொலுப்பை சேர்த்தாய்

இடியாப்பத்தை மறந்தாய்
நூடுல்ஸ் என்றாய்
உணவு செரிக்கவில்லை என்றாய்

பாரம்பரிய தானியங்களை மறந்தாய்
துரித உணவு என்றாய்
மாரடைப்பு வந்து படுத்தாய்

உன் மொழியை மறந்தாய்
பாரம்பரியத்தை இழந்தாய்
உன் உணவை யாரோ தீர்மானிக்கும் நிலையை அடைந்தாய்

கூட்டு குடும்பத்தை சிதைத்தாய்
உறவின் பாசம் தெறியாமல் குழந்தை வளர்த்தாய்
பதினெட்டு வயது மகன் – நீ யார் என்றான்

கூட பிறந்தவனை “அகதி” என்றாய்
இன்றைக்கு நீ இருக்கும் நிலம் தவிர
தண்ணீர், மின்சாரம், அரிசி அனைத்தும் பிச்சை

தொண்ணூறு, நூறு வயதுகள் வாழ்ந்த இனம்
நோய் இன்றி அறுபது வாழ்ந்தால் போதும் என்கிறது..
ஏன் இந்த அவசரம் தமிழா..?

கொஞ்சம் கருணை காட்டு
பாரம்பரியம் வளரட்டும்
உறவுகள் தொடரட்டும்
உடல் நலம் செழிக்கட்டும்

மெல்ல தமிழ் இனி துளிர்க்கட்டும்...!

“இன்டைக்கு ரெண்டில ஒன்டு பாப்பம், அவனா நானா என்டு”

புலி புலியாகவே இருக்க முடிவுசெய்தது .  பால்ராஜ் அதே  பாதையில் செல்ல முடிவெடுத்தார். வேறு யாரும் என்றால்  இந்த பாதையை தவிர்த்து விட்டு வேற...