யாழ் தேவி..
இது எதிர் தாக்குதல் ,கால அளவு
மிகவும் குறைவு , பால்ராஜ் நிறைவான திட்டமே தீட்டினார்.
அலுவலக பணியில் பால்ராஜ்
பூநகரி திட்டத்தில் இருந்து உடனடியாக தனது நடவடிக்கைகளை
மாற்றி யாழ்தேவி ஆபரேஷன் முறியடிப்பில் இறங்கினார். கடுமையான யுத்தம் , சிங்கள
படைகள் யானை இரவு முகாமில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தார்கள். பால்ராஜ் கள
நெருக்கடியில் வழக்கம் போல் களமுனைக்கு சென்று ஆயுதம் ஏந்தினார். அவர் ஒரு
திறமையான RPG shell அடிக்கும் வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த
நேரத்தில் ஒரு டாங்கியை தகர்க்கும் போது
பால்ராஜின் காலில் கடுமையான காயம் பட்டது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் படை
நடத்தி சிங்கள படையை பின்வாங்க வைத்தார். மேலும் ஒரு டாங்கியை முழுமையாக கைப்பற்றி
தங்கள் வசம் ஆக்கினார்கள் இதே நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் சரத்
பொன்சேகா அவர்களும், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களும் கடுமையாக காயம் அடைந்தர்கள்.
காயத்திற்கு பிறகும் பால்ராஜ் கள ஒருங்கிணைப்பை செய்தார் என்பதில் ஆச்சரியம்
இல்லை.
புலிகளின் தாக்குதல்
புலிகளின் மீதான கடைசி யுத்தத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா
தான் ராணுவ தளபதியாக இருந்து சிங்கள ராணுவ படை நடத்தினார் என்பது
குறிப்பிடத்தக்கது .
முல்லைத்தீவு தாக்குதல்
1996 ஆம் வருடம் யாழ் குடாவில் இருந்து புலிகள்
பின்வாங்கினார்கள் தங்கள் நடவடிக்கைகளை வன்னிக்கு மாற்றி அமைத்தார்கள். தலைவரின்
உத்தரவுக்கு இணங்கி முல்லைத்தீவு ராணுவ முகாம் தாக்குதலுக்கான திட்டம் தயாரிக்க
பட்டது. பால்ராஜ் இந்த தாக்குதலுக்கு இட்ட பெயர் “ஓயாத அலைகள்-1“. திட்டம் தயாரிக்க பட்டது , முழு வீச்சில்
பயிற்சிகளும், உளவு நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. தாக்குதலுக்கான நாள் குறிக்க
பட்டு தாக்குதல் திட்டங்கள் இறுதி வடிவம் பெற்றது.
1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் திட்டப்படி
தாக்குதல் தொடங்கியது. முதலில் கைப்பற்றவேண்டிய இடம் கடற்கரை பகுதி அங்கு கடுமையான
சண்டை நடந்தது. சிங்கள படைகளிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றபட்டது. அந்த
ஆயுதங்களில் கனரக பீரங்கிகளும் அடங்கும்.
கடற்கரையில் சிறிதாவது தங்கள் வசம் இருந்தால்தான் மேலதிக
படைகளை நாம் பெற முடியும் என்கிற ஒரு நினைப்போடு சிங்கள படைகளும் களமாடின.
பால்ராஜ் கள முனையில் இருந்து நிலமையை அவதானித்து தலைவருக்கு ஒரு செய்தி
அனுப்பினார். மேலதிக படைகள் இல்லை என்றால் கடற்கரை நமது கட்டுபாட்டுக்குள் வராது,
இது சிங்கள படைகளுக்கு மேலதிக படைகள் வருவதற்க்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்
என்று தெரிவித்தார்.
தலைவரின் உத்தரவுக்கு இணங்க கர்னல்.பானுவின் படை உதவிக்கு
அனுப்பப்பட்டது. அதுவரை சாதகமில்லாமல் இருந்த கள நிலவரம் புலிகளுக்கு சாதகமாக
மாறியது. மீதம் இருந்த கடற்கரையும் புலிகள் வசமானது.
மேலதிக உதவிக்கு வந்த சிங்கள படைகள் புறமுதுகிட்டு
தங்கள் முகாம் நோக்கி திரும்பின. சுமார் ஆயிரம் சிங்கள வீரர்கள் வரை கொல்லப்பட்டார்கள்.
ஆயுதங்கள் அதிக அளவிலே கைப்பற்ற பட்டன. ஈழப்போராட்ட வரலாற்றில்
முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இந்த தாக்குதலில் தான்.
முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
“சத்ஜெய” முறியடிப்பு தாக்குதல்
முல்லைத்தீவில் அடிபட்ட சிங்கள படை அடுத்த திட்டமாக
“சத்ஜெய” என்னும் படையெடுப்பு தாக்குதல் நடத்தி பரந்தன் என்னும் இடத்தை
பிடித்தார்கள். வெற்றி பெற்ற சிங்களப்படை அடுத்த நடவடிக்கையாக சத்ஜெய-2 என்னும்
நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் தடுத்து நிறுத்தி சிங்கள படைகளை
திரும்ப அனுப்ப பால்ராஜ் அங்கு அனுப்பப்பட்டார். சிதைந்து இருந்த காவல் அரண்களை
ஒழுக்குபடுத்தி மீண்டும் படைகளை தயார்நிலையில் எல்லையில் நிறுத்தினார். சத்ஜெய-2
நடவடிக்கை நடந்தால் எதிர்கொள்ள பால்ராஜின் திட்டம் தயார்.
அவரது திட்டத்தை விளக்க வேண்டும் என்றால் - புரிந்துகொள்ள ஏதுவாக ஒன்றை சொல்கிறேன்...
ஒரு ஆறு ஒன்று ஓடுகிறது அதில் இருந்து ஒருபுற கரையை
உடைத்துக்கொண்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து பள்ளமான திசையில் பயணிக்கிறது என்று
வைத்துகொள்வோம். முதலில் வெள்ளத்தை ஊருக்குள் கரையை உடைத்துக்கொண்டு உள்ளே வர விடுவது.
உடனடியாக கரையை சரிசெய்து பலபடுத்தி மீண்டும் வெள்ளம் உள்ளே புகாமல் செய்வது ,
பிறகு உள்ளே வந்த வெள்ளத்தை கையாளுவது. இதுதான் திட்டம்.
பயிர்ச்சி
சிங்கள ராணுவம் உடைத்துக்கொண்டு உள்ளே வரக்கூடிய பாதைகள்
இனம் காணபட்டு அங்கு இருக்கும் காவலரணை மீண்டும் கடுமையானதாக ஆக்குவது , மேலதிக
படைகள் உள்ளே நுழைய முடியாது , உள்ளே சென்ற படைகள் திரும்ப முடியாது. இதுதான்
திட்டம்.
சிங்கள படைகள் உள்ளே அகப்பட்டன சரியாக தாக்கி அழிக்க
பட்டார்கள். ஆயுதங்கள் கைப்பற்றபட்டன. உள்ளே நுழைய முற்பட்ட மேலதிக படைகள் பின்
வாங்கி தங்கள் நிலைக்கு திரும்பின. – இதுதான் பால்ராஜ். இந்த தாக்குதலில் கருணா
அம்மான் அவர்களது படைகள் காவலரணை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த பட்டார்கள்.
கிளிநொச்சி படைமுகாம் அழிப்பு
சத்ஜெய என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிவரை தங்கள் வசமாக்கிய சிங்களப்படை , கிளிநொச்சியில்
படைமுகாம் அமைத்து நிலைகொண்டிருந்தார்கள். கிளிநொச்சி ராணுவ முகாமை தாக்கி அழிப்பது
என்று முடிவு செய்யப்பட்டு திட்டம் வகுக்கபட்டது. ஆனையிறவு – பரந்தன் – கிளிநொச்சி இராணுவ
படைத்தளம் நமது PSLV ராக்கெட் போன்று நீளமாக இருக்கும் ஒரு இடம். ஒரு அற்புதமான
தாக்குதல் திட்டம் இங்கு பால்ராஜ் அவர்களால் வகுக்கபட்டு இயக்க தலைவரால் செழுமை
படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
கடுமையான தாக்குதல் தருணங்கள்
பரந்தன் என்னும் இடத்திற்கும்– கரடிப்போக்கு
என்னும் இடத்திற்கும் இடையே ஒரு
குறுக்கறுப்புத் தாக்குதலை நடத்துவது, கிளிநொச்சித் தளத்தை அழிப்பது என்று இரண்டு தாக்குதள் திட்டங்கள் வகுக்க பட்டன.
மிகவும் ஆபத்தான குறுக்கறுப்பு தாக்குதலை பால்ராஜ்
முன்னின்று நடத்துவது என்றும் , முகாமை அழிப்பதை பால்ராஜின் உதவி தளபதி கர்னல்
தீபன் செய்வது என்றும் முடிவாகியது. குறுக்கறுத்து தனது கட்டளை பீடத்தை பால்ராஜ் நிறுவினார்.
சிங்கள ராணுவம் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பால்ராஜை அங்கிருந்து அப்புறபடுத்த
முடியவில்லை. பால்ராஜின் படைஅணி ஒரு தடுப்பு சுவராய் மாறி சிங்கள ராணுவம் உள்ளே
நுழையவோ, அங்கிருக்கும் ராணுவத்திற்கு உதவவோ முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியது.
அந்த நீண்ட தளம் இரண்டாக பிளவு பட்டது. கிளிநொச்சி பகுதியில் அமைந்திருந்த ராணுவ
முகாமை ஒழித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினரை அழித்து மிகபெரும் ஆயுத குவியலை
தங்கள் வசம் எடுத்து சென்றார்கள். இந்த தாக்குதலில் தீபனின் பங்கு இருந்தாலும்,
இந்த வெற்றி முழுக்க முழுக்க பால்ராஜின் ராணுவ மூளைக்கு கிடைத்த ஒரு வெற்றியாக
தான் பார்க்கபடுகிறது. இதற்காக உளவு அமைப்புகள் மேற்கொண்ட பணியும் மிகவும்
பாராட்டுதலுக்கு உரியதாக இருந்தது.
‘வன்னி விக்கிரம”
வன்னி விக்கிரம படை
நடவடிக்கை என்பது சிங்கள ராணுவம் ஓமந்தையில் இருந்து கோகோவில் நோக்கி படை
நகர்த்திய ஒரு நிகழ்வாகும். மேலும் இது ஒரு மரபுவலி தாக்குதல். இதற்கான
எதிர்தாக்குதலை பால்ராஜ் அவர்கள் பனிக்க நீராவி என்னும் இடத்தில் நடத்தினார். இந்த
மரபுவழி சண்டையில் சிங்கள படைகளின் துப்பாக்கி சுடுதல் மிக அதிகமாக இருந்தது.
பால்ராஜ் வசம் இருந்தவர்கள் அனுபவம் குறைந்த வீரர்கள் , யோசித்த பால்ராஜ் தானே
களத்தில் இறங்கினார். சண்டையை முன்னேடுத்தபடியே கள உத்தரவுகளையும் வழங்கினார்.
பால்ராஜ் களமுனையில் போராடுவதே ஏனைய போராளிகளுக்கு ஒரு உற்சாகத்தையும்,
உத்வேகத்தையும் கொடுத்தது. “வன்னி விக்கிரம” நடவடிக்கையை கைவிட்டுவிட்டு சிங்கள
படை ஓமந்தை திரும்பியது.
சத்ய சோதனை
எதிரிப்படைகளை சரியாக திட்டமிட்டு, நிலையெடுத்து பந்தாடிய பால்ராஜ் அவர்களுக்கு
தலைவர் ஒரு திட்டம் வைத்து சோதித்தார். அவரது மனோ திடத்தையும், அற்பணிப்பையும் சோதிக்க
ஒரு சந்தர்ப்பம் என்றுகூட சொல்லலாம்.
அவரை புலிகள் இயக்கத்தில் உள்ளே கொண்டுவந்து, இந்திய ராணுவ
பயிற்சியை வழங்கி, தலைவரிடத்தில் அறிமுகபடுத்தி அவரது திறமைக்கு உரியபதவிகள்
வழங்கி, வாய்புகள் சரிவர அமைத்து கொடுத்த “மாத்தையா” அவர்கள் இந்தியா வின் RAW
என்கிற உளவு அமைப்பின் கை கூலியாக மாறினார் என்கிற ஆதாரங்கள் புலிகளுக்கு
கிடைத்தது. உளவாளிகள் எல்லா இடங்களிலும் இரு தரப்பாலும் வைத்திருப்பது வழமையான
ஒன்று , ஆனால் இந்தியா அதில் நுழைந்து
உள்ளே மூன்றாம் தரப்பு உளவாளி என்று சிலரை வைத்திருந்தார்கள்.

“மாத்தையாவும் பிரபாகரனும் "
புலிகளின் தலைமை இனி யோசிக்க ஒன்றும் இல்லை , நமது
அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர் , பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் எல்லா விசயங்களையும்
செய்ய கூடிய ஒருவர் இந்த நிலைக்கு சென்றுவிட்டார் என்பதே மிகபெரும் அதிர்ச்சி ,
எனவே எல்லோருக்கும் பாடமாக இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது.
பல மூத்த தளபதிகள் இருக்கும் போது , பால்ராஜ் அவர்களுக்கு
மாத்தையாவை கைதுசெய்து அழைத்துவரும் கடுமையான பணி வழங்கப்பட்டது.
பால்ராஜ் என்ன செய்தார்....மாத்தையா கைது செய்யப்பட்டரா..? பால்ராஜ் மாத்தையா பக்கம் சாய்ந்தாரா...? அடுத்த பதிவில் பாப்போம் ..சத்திய சோதனையை...