தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

“இன்டைக்கு ரெண்டில ஒன்டு பாப்பம், அவனா நானா என்டு”


புலி புலியாகவே இருக்க முடிவுசெய்தது.  பால்ராஜ் அதே  பாதையில் செல்ல முடிவெடுத்தார். வேறு யாரும் என்றால்  இந்த பாதையை தவிர்த்து விட்டு வேறு பாதையில் செல்லலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். பால்ராஜ் தனது வழக்கமான “பன்ச் டயலாக்” என்று நமது திரை வீரர்களால் சொல்லபடுவது போல் ஒரு வசனத்தை சொன்னார்.

“இன்டைக்கு ரெண்டில ஒன்டு பாப்பம், அவனா நானா என்டு”

உடனடியாக ஒரு திட்டத்தை தயாரித்தார்... அணி இரண்டாக பிரிவது... ஒரு அணி அவர்கள் காத்திருக்கும் பாதையில் செல்வது மற்ற அணி அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தவுடன் பின் புறம் சென்று சுற்றி வளைத்து தாக்குவது. இது தான் திட்டம்.





திட்ட படி ஒரு அணி லேப்.கேணல் நவநீதம் தலைமையிலும் மற்ற அணி பால்ராஜ் தலைமையிலும் சென்றது.  பால்ராஜின் வேட்டைக்கார மூளை அங்கு மிக வேகமாக செயல்பட்டு பறவைகளின் வித்தியாசமான பறக்கும் முறையையும், சுற்றும் முறையையும் அவதானித்து இந்திய ராணுவம் பதுங்கி இருக்கும் இடத்தை சரியாய் கண்டுபிடித்து,  திட்டமிட்ட படி



புலிகளின் தேசத்தின் குரல் ஆன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம்


புரட்சி தலைவர் MGR உடன் பிரபாகரன் 



தாக்குதல் தொடுக்க பட்டு மிக பெரும் ஒரு வெற்றியை பால்ராஜ் தனது தந்திர மூளையின் திட்டமுடிதல் மூலம் பெற்றார். இத்தோடு அங்கிருந்து போகலாம் என்று மற்ற வீரர்கள் சொன்னார்கள். அதை மறுத்துவிட்டு மேலதிக உதவிக்கு (ADDITIONAL FORCES) வரும் படை அணியையும் ஒரு கை பார்ப்பம் என்று மற்றும் ஒரு தாக்குதலை நடத்திவிட்டு தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

இதை போல எத்தனையோ தாக்குதல்கள் , நமது இன்ஸ்டன்ட் காப்பி போன்று உடனடி திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல். மற்ற தளபதிகள் போல் அல்லாமல் தாக்குதலை முன்னின்று நடத்துவது. இதுதான் பால்ராஜின் ராணுவ வெற்றிக்கு மூல காரணமாக இருந்தது.

இந்திய ராணுவத்திற்கு சில வெற்றிகள் கிடைத்தாலும், பூகோளம் பற்றி சரியான புரிதல் இல்லாத படைபிரிவு, மற்றும் எதிரி யார் என்று கணிக்க முடியாத சூழ்நிலை, புலிகளின் தந்திர நடவடிக்கைகள் ஒருபுறம், மக்களோடு மக்களாய் நிற்க கூடிய போராளிகள், சாதாரண மக்கள் புலிகளுக்கு வழங்கிய  உளவு தகவல்கள் ஆகியவை இந்திய படைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பதில் சந்தேம் இல்லை. இந்திய படைகள் அங்கிருந்த வரை அவர்களது கை ஓங்கி இருந்தது என்பதில் சந்தேம் இல்லை.

ஒருவழியாக இந்திய இராணுவம் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இலங்கை ராணுவத்தின் வசம் ஒப்படைத்துவிட்டு படிபடியாக இந்தியா திரும்பியது. 1990 மார்ச் மதத்தில் இந்திய இராணுவம் முழுமையாக இந்தியா திரும்பியது.

இந்திய இராணுவம் களத்தில் இல்லை என்றவுடன் மீண்டும் புலிகள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை சுதந்திரமாக ஆரம்பித்தார்கள். பால்ராஜ் அவர்களின் நடவடிக்கை அவர் என்றும் மக்களோடு என்பதை உறுதிபடுத்தியது. இந்திய ராணுவம் இருந்த நாட்களில் தங்களுக்கு உதவிபுரிந்த , அடைக்கலம் கொடுத்த, உளவு தகவல் கொடுத்த நபர்களை தேடி சென்று நன்றி தெரிவித்து விட்டு மக்களோடு மக்களாய் கலந்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்து  அவர்களுக்கு அப்போதைக்கு முடிந்த உதவிகளை செய்துவிட்டு வந்தார். மக்களால் எப்பொழுதும் நெருங்க கூடிய புலி தளபதியாக இருந்தார்.

மற்ற தளபதிகள் எல்லாம் பாதுகாவலர்களோடு நெருங்கவே முடியாத சூழ்நிலையில் இவர் மட்டும் சாதாரணமாக மக்களால் சந்திக்க முடிந்தவராக இருந்தார்.


 மூன்று முகாம்

மாங்குளம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இலங்கை இராணுவம் அமைத்திருந்த முகாம்கள் வன்னி நிலபரப்பில் புலிகளுக்கு மிகபெரும் ஒரு இடைஞ்சலாக இருந்தது. பொது மக்களுக்கும் மிகபெரும் இடைஞ்சலாக இலங்கை ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.

பால்ராஜ் முடிவெடுத்தார். முதலில் அப்புறபடுத்த வேண்டிய முகாம்கள் இவை மூன்றும் தான். இவைகள் அப்புறபடுத்த படவில்லை என்றால்  வன்னி நிலபரப்பை மறந்துவிட வேண்டியதுதான் என்பதில் மிக தெளிவாக இருந்தார்.













1990 மதிய பகுதியில் முதல் தாக்குதல் மாங்குளம் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது. சிறிய வெற்றிகள் கிடைத்தாலும் தங்களுக்கு மிகபெரும் இழப்பு ஏற்படும் என்பதை உணர்த்த பால்ராஜ் படைகளை பின் வாங்கினார். இதை போலவே முல்லைத்தீவு படைமுகாம் மீதும் நடந்த தாக்குதல் ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியாமல் பின் வாங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் கொக்காவில் ராணுவ முகாமை கைப்பற்ற வேண்டும் என்கிற திட்டம் தயாரானது. பால்ராஜ் மற்றும் அவரது துணை தளபதியான தீபனும் (மற்றும் ஒரு உன்னத போராளி – சிறந்த தளபதி மற்றும் வீரர்)  அமர்ந்து திட்டங்களை தீட்டி சண்டையை ஆரம்பித்தார்கள். ஒரு சில இடங்கள் புலிகளிடம் வீழ்ந்தது , இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தீபனும் சில தளபதிகளும்  காயம் அடைந்து களத்தில் இருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. பால்ராஜின் மனதிற்குள் எண்ணவோட்டம் வேறுமாதிரியாக இருந்தது,

ஏற்கனவே மூன்று தாக்குதல்களில் பின் வாங்க நேரிட்டது அதுவே இராணுவத்தின் உள்ள உறுதியை அதிகபடுத்தியிருக்கும், அதே நேரம் நமது வீரர்களின் மனஉறுதியை குறைத்திருக்கும், இப்பொழுது நாம் உற்சாக படுத்தி நேரடியாக இறங்கி களமாடினால்தான் வெற்றி உறுதியாகும் என்பதை புரிந்துகொண்டு களத்தில் இறங்கினார்.


எதிரியின் கை ஒங்கி விட கூடிய ஆபத்தும் இருந்தது. சற்றும்  யோசிக்காத பால்ராஜ் அவர்கள் உடனடியாக களமுனைக்கு சென்று வீரர்களை ஒருங்கிணைத்து தனது வழமையான பஞ்சு டயலாக்கை வீரர்களுக்கு நடுவில் “இன்டைக்கு ரெண்டில ஒன்டு பாப்பம், அவனா நானா என்டு” சத்தமாக உரைத்துவிட்டு தானும் ஆயுதம் ஏந்தி களமுனையில் தாக்குதலை முன்னெடுத்தார்.

பால்ராஜ் தங்களோடு களமாடுகிறார் என்பதே வீரர்களுக்கு மிகபெரும் உத்வேகத்தை கொடுத்தது. முழு முனைப்பையும் காட்டி தாக்குதலை கொடுத்தார்கள். களமுனை ஒருங்கிணைப்பை பால்ராஜ் தனது அனுபவ அறிவை வைத்து மிக சரியாக செய்தார். முகாம் வீழ்ந்தது.  புலிகளின் வரலாற்றில் முதன்முதலில் கைப்பற்றி அழிக்க பட்ட ஒரு ராணுவ முகாம் என்று இந்த தாக்குதல் பதிவாகியது.

தாக்குதல் முடிவடைந்தாலும் பால்ராஜின் கவனம் முழுவதும் தாக்குதலில் பின் வாங்கிய மற்ற மூன்று முகாம்களை மீண்டும் தாக்கி கைபற்ற வேண்டும் என்பதில் இருந்தது.



முதலில் கையில் எடுத்தது மாங்குளம் ராணுவ முகாமை. சரியான திட்டமிடல் நடந்தது.  கரும்புலிகளின் உதவியும் கோரப்பட்டது. உளவு தகவல்கள் ஒருமுறைக்கு பலமுறை சரிபார்க்கப்பட்டது. மாங்குளம் முகாம் வானூர்தி இறங்கு தளத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. ராணுவத்திற்கு மேலதிக உதவி வேண்டும் என்றால்  வானூர்தி மூலம் உதவமுடியும், அந்த அணி வந்து இறங்க வாய்ப்பு இருப்பதையும் பால்ராஜ் கவனத்தில் கொண்டார். தாக்குதல் திட்டம் வகுக்க பட்டது. முதலில் காவல் அரண்களை தாக்கி அழிப்பது, அதை தொடர்ந்து கரும்புலி தாக்குதல்  மற்றும் பின்புறம் இருக்கும் வயல் வெளியில் இருந்து மற்றும் ஒரு படையணி தாக்குதலை நடத்துவது என்று முடிவாகியது.


தாக்குதல் வெற்றி பெற்றதா...? முகாம் யாருக்கு.... அடுத்த பதிவில் பாப்போம்...நண்பர்களே...

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...