தொடரும் நண்பர்கள்

சனி, 7 அக்டோபர், 2017

ஈழத்தில் விளைந்த வீர தளபதிகள் - புலி பாய்ச்சலா, எலி ஓட்டமா

தோழமைகளே, 

முதல் வாரத்துக்கு பிறகு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் உங்கள் பதிவுகள் ஈழம் பற்றிய இணையத்தில் வந்த செய்திகள் தானே அதை ஏன் மீள் பதிவிடுகிறீர்கள்  என்பதே கேள்வியாக இருந்தது. 

ஆம். பல்வேறு இணையதளங்களில் இருந்து என்னால் தொகுக்கப்பட்ட செய்திகளைத்தான் பதிவுசெய்கிறேன். அதில் மறைப்பதற்கு ஒன்றும்  இல்லை. இந்த செய்திகளை  அறிந்திருந்தால் சரி, இல்லை என்றாள் எனது பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். செய்திகள் அனைத்தும் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுக்கபட்டது, மற்றும் புத்தகங்களில் இருந்து படித்து அறிந்துகொள்ளபட்டதும் தான்.

நான் செய்திகள் சேகரிந்த இணையதள முகவரிகளை பதிவிடுகிறேன். 

நன்றி நண்பர்களே !


புலிகள் இயக்கத்தில் சேர்ந்தாலும் பால்ராஜ் அவர்களுக்கு உதவியாளர் என்கிற  நிலைதான் இருந்தது. எடுபிடி வேலைகளை செய்துவந்தார்.  அந்த நேரங்களில் புலிகளுக்கான ஆயுத  பயிற்சி இந்தியாவில் நடந்துவந்த காலகட்டம், பாலசேகரன் என்கிற பால்ராஜ்க்கு   பயிற்சி உள்நாட்டிலே வழங்கப்பட்டது. அவரது பழைய தொடர்புகள் இந்திய ஆயுத பயிற்சியை வழங்க தடையாக இருந்தது. ஆனாலும் எந்த  பணியாக இருந்தாலும் பால்ராஜ் மிகுந்த உற்சாகத்தோடு செய்துவந்தார்.

முல்லைத்தீவு காடு என்பது அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒரு இடம்தான். இந்த ஒரு தகுதி அவரை அடுத்த நிலைக்கு தள்ளியது.

1984 ஆம் வருட மத்தியில் லெப்டினன்ட் காண்டீபன் அவர்களோடு ஒரு டிராக்டர் வண்டியில் வழி காண்பித்தபடி போய் கொண்டிருக்கும் போது சிங்கள அரச படைகளால் பதுங்கி இருந்து தாக்கபட்டார். அதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக  இந்தியாவிற்கு அனுப்பிவைக்க பட்டார்.


பால்ராஜ் சிகிச்சை பெறும் அதே மருத்துவ மனையில் தான் அன்றைய புலிகளின் ராணுவ தளபதி மாத்தையா அவர்களும் அனுமதிக்கபட்டிருந்தார். மாத்தையா அவர்களுடனான பழக்கம் பால்ராஜ் அவர்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.  மாத்தையாவுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பில் அவருக்கு உதவும் பொழுது தனது நிலபரப்பான முல்லைத்தீவு நகரம் பற்றியும் அதனை சூழ்ந்துள்ள காடுகளை பற்றியும் பால்ராஜ் தெரிவித்த கருத்துக்கள் குறிப்பாக மணல் ஆறு மற்றும் வெலிஓயா காடுகளை பற்றிய அவரது பூகோள அறிவு  மாத்தையாவிற்கு வியப்பை ஏற்படுத்தியது. தலைமையை  தொடர்பு கொண்ட மாத்தையா, பால்ராஜ் அவர்களுக்கு முதலில் மறுக்கப்பட்ட இந்திய ஆயுதத் பயிற்சியை வழங்க ஏற்பாடுசெய்தார். 

இந்தியாவில் புலிகளுக்கு வழங்கப்பட்ட ராணுவ பயிற்சியில் ஒன்பதாவது பயிற்ச்சி அணியில் பால்ராஜ்  இடம் பெற்றார். பயிற்ச்சி முடித்து 1984 ஆம்  வருடங்களின் பிற்பகுதியில் மாத்தையாவின் பாதுகாவலர்களில் ஒருவராக தன்னை இணைத்துகொண்டார். இருந்தாலும் அவருடைய புளொட் தொடர்பு பற்றிய தகவலினால் சமையல் அறையில் உதவியாளராக தான் இருக்க முடிந்தது.

புலிகள் இயக்கத்தில்  ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால் , அந்த சந்தேகம் நூறு சதவீதம் தெளிவாகும் வரை வாய்ப்பு என்பது மறுக்க படும். அதற்கு யாரும் விலக்கு இல்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளது. ஏன் பால்ராஜை இயக்கத்திற்கு கொண்டுவந்த மாத்தையா கூட அதற்கு விதிவிலக்கு இல்லை.

பால்ராஜ் தனக்கு வழங்கப்பட்ட சமையல் அறை உதவியாளர் வேலையை சர்வ சிரத்தையோடு செய்தார். சிறு சிறு தாக்குதல்களில் உதவிகளை புரிந்துவந்தார். 1986 ஆம் வருடம் புலிகளின் தாக்குதலில் ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டார். ஆனால் அந்த தாக்குதல்களில் பால்ராஜின் வேகத்தையும், விவேகத்தையும் கண்டு வியந்தவர்கள், புலிகளில் இரண்டாம் நிலை  தலைவராக இருந்த மாத்தையாவிடம் இதை தெரிவித்தார்கள். ஏற்கனவே பால்ராஜ் பற்றி அறிந்திருந்த மாத்தையா பால்ராஜை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகளை செய்தார்.  

வன்னி நிலபரப்புக்கு மாத்தையா பொறுப்பாளராக இருந்தாலும், புலிகளின் மூத்த உறுப்பினர்கள் ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ராணுவ பொறுப்பாளர்களாக  நியமிக்க பட்டார்கள்.

முல்லைத்தீவு என்றவுடன் பால்ராஜின் நினைவுதான் மாத்தையாவுக்கு வந்தது, அவரையே பசீலனுக்கு உதவுவதற்கு பசீலனின்  படையின் துணை தளபதியாக  நியமித்தார். பால்ராஜின் பூகோள அறிவுடன் இயற்கையாகவே அவருக்கு இருந்த கற்றுகொள்ளும் ஆர்வமும், சரியாக திட்டமிடும் அறிவும்  சேர்ந்து வெற்றிகரமாக செயல்பட முடித்தது. மணல் ஆறு மற்றும் வெலிஓயா காடுகளை பற்றி அங்குலம் அங்குலமாக தெரிந்தவராக இருந்தார். இதுவே புலிகளுக்கு மிகபெரும் பலமாக இருந்தது.

பால்ராஜ் அருகில் கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் 


1987 – இல் இந்திய அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகள் இடம்பெற்ற போது பால்ராஜ் கோப்பை என்ற இடத்தில நடைபெற்ற மோதலில் பங்குபெற்று இந்திய பீரங்கி ஒன்றை தனிநபர் தாக்குதலில் தகர்த்து எரிந்தார். இந்த மோதல் அவரது ராணுவ திறமையை புலிகள் அறிந்துகொள்ள உதவியது.

1988 – இல் இந்திய ராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருத்த நாட்கள் , புலிகளில் தலைவர், மாத்தையா, மற்றும் புலிகளின் உயர்நிலை தளபதிகள் அனைவரும் வன்னி நிலபரப்பில் முல்லைத்தீவு காடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இந்த நேரத்தில் இந்திய படையுடன் நடைபெற்ற தாக்குதலில் பசீலன் மரணம் அடைந்தார். தளபதி இல்லாத படையாக நின்ற முல்லைத்தீவு  படையை பால்ராஜ் தலைமை ஏற்று தாக்குதலை முன்னெடுத்தார், பிறகு தலைவர் பிரபாகரனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார்.




பசீலன் அண்ணை மற்றும் இளமை கால பால்ராஜ் 

முல்லைத்தீவு தளபதியாக உயர்த்தப்பட்ட நேரத்தில் இந்திய படையின் கை உயர்ந்திருந்தது. புலிகள் மனதளவிலும், ஆயுத மட்டும் வீரர்கள் பற்றாக்குறையாலும் மிக மோசமாக பாதிக்கபட்டு இருந்த காலம். உடனடியாக இருக்கும் வீரர்களின் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று நினைத்த பால்ராஜ், சரியாக  திட்டமிட்ட  இருவேறு தாக்குதல்களில் சுமார் 25 இந்திய வீரர்கள் வரை கொல்லப்பட்டதன் மூலம் புலிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கினார்  என்பதில் சந்தேகம் இல்லை.


கடல்புலி தளபதி சூசை மற்றும் பால்ராஜ் 


உலகின் ஒரு சிறந்த கமாண்டோ படையுடன் போரிடுகிறோம் என்கிற உணர்வு இருந்தாலும் தனது முடிவெடுக்கும் திறமையாலும், போர்முனையில் படையை தானே முன்னின்று நடத்தியதாலும் பல வெற்றிகளை குவிக்க முடிந்தது. இந்திய படைஅணி அங்கிருத்த காலகட்டங்களில் பல்வேறு தாக்குதல் திட்டங்களை புலிகள் நடத்தினாலும், ஒவ்வொரு களமுனைக்கும் நேரில் நடந்தே சென்று உத்வேகத்தையும், உத்திகளையும் வழங்கி இந்திய படைக்கு மிகபெரும் ஒரு சவாலாக திகழ்ந்தார். ( அந்த கால கட்டத்தில் புலிகளின் தலைவர் யாரையும் வாகனங்கள்  உபயோகிக்க தடை விதித்திருந்தார் , வாகன உபயோகம் புலிகள் என்பதை இந்தியா ராணுவத்திற்கு எளிதில் காட்டி கொடுத்துவிடும் என்பது தான் காரணம்)

மணலாற்று காட்டு பகுதியில் புலிகளின் தலைவர் முகாமிட்டு உள்ளார் என்கிற தகவலை அடுத்து இந்திய ராணுவம் தாக்குதலை தீவிரபடுத்தி தலைவரை கைது செய்ய வேண்டும் என்று முயற்சித்தார்கள். பால்ராஜ்க்கு இது மிகபெரும் ஒரு சோதனையான காலகட்டமாக இருந்தது. தலைவரை பாதுகாப்பதோடு அவரை பார்பதற்கு வருபவர்களையும் வரும் தகவல்களையும் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து வேலைகளையும் சரியாய் செய்துமுடித்து தலைவரின் நம்பிக்கைக்கு உகந்தவரானார்.

இந்திய ராணுவ முகாம் மீதான ஒரு தாக்குதலில் தளபதி பசீலன் அவர்கள் வீரசாவடைந்தார்.  அதை தொடர்ந்து தலைவரின் உத்தரவின் பேரில் வன்னி பிராந்திய  தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார்.  இதற்கு பின்னால் தலைவர் பிரபாகரனின் ஒரு தந்திர நடவடிக்கை இருந்தது. மணல் ஆறு பகுதியில் இடம்பெறும் ராணுவ நடவடிக்கைகளை இந்திய ராணுவம் குறைக்க வேண்டும் என்றால்  வன்னி பிராந்தியம் முழுவதும் ராணுவத்துக்கு எதிரான ஒரு தாக்குதல் நடவடிக்கை நடக்க வேண்டும். அதை நடத்த இந்த பிராந்தியம் முழுவதும் அறிந்த தளபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பால்ராஜை நியமித்தார். பால்ராஜ் தலைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக வன்னி பிரதேசம் முழுவதும் நடைபயணமாகவே சென்று படையை தயார் செய்து தாக்குதல்களை தீவிர படுத்தினார்.

ஒரு தாக்குதல் நடவடிக்கை திட்டமிவது என்பது சாதாரண விஷயம் இல்லை. தாக்குதல் நடத்த முதலில் சிறந்த அணியை தயாரிக்க வேண்டும், தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களை சேகரிக்க வேண்டும், அதன் இயங்கும் திறனை சோதிக்க வேண்டும், எதிரியின் பலம், பலவீனம் அறிய உளவு பார்க்க வேண்டும். அந்த உளவு தகவல் சரியா  என்பதை சரி பார்க்க வேண்டும். திட்டம் தோல்வி அடையும் போது செயல்படுத்த மாற்று திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ செயல்பாடுகளை  திட்டமிட வேண்டும்.

ஆனால் எதிரி கண்ணில் பட்டவுடன் தாக்கவேண்டும் என்றால்  அந்த வினாடியில் அணியாக இணைத்து தாக்குதல் நடத்த சரியான ஒரு திட்டமிடல் நடத்த வேண்டும். அதன் படி வீரர்கள் நடக்க வேண்டும், அந்த திட்டம் தோல்வியில் முடிவடையும் போது மாற்று திட்டத்தை அமுல் படுத்த அதையும் யோசித்து வைத்திருக்க வேண்டும். பால்ராஜ் அவர்கள் இப்படிப்பட்ட வெற்றிகரமான  திட்டங்கள் தயாரிக்க ஒரு தொழில் முறை தளபதியாகவே மாறி இருந்தார்.


தலைவர் பிரபாகரனோடு தாக்குதல் திட்டத்தை பற்றிய விவாதம் 


இந்திய ராணுவத்தின் ஒரு விசேட கமாண்டோ அணி  “பதுங்கி தாக்குதல்” என்கிற முடிவை எடுத்து,  புலிகள் செல்லும் பாதையை அவதானித்து பதுங்கி இருந்தார்கள். அந்த விசேட அணியின் கால் தடங்களை கொண்டே இந்த பாதையில் பதுங்கி தாக்கும் முடிவுடன் இந்திய காமண்டோகள் எங்கோ பதுங்கி இருக்கிறார்கள் என்பதை பால்ராஜ் அறிந்துகொண்டார் .
தாக்குதல் திட்டத்தோடு இருந்த இந்திய படைகளை எதிர்கொண்டாரா..|? அல்லது இந்த பாதை நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்து வேறு பாதையில்  பயணித்தார ...? அடுத்த பதிவில் பாப்போம்,,,புலி பாய்ச்சலா, எலி ஓட்டமா...என்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...