தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

ஈழ போராட்டத்தில் வீர தளபதிகள்



புலிகள் பற்றி பல்வேறு கருத்துகள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்கள் தீவிரவாதிகள் என்கிற நிலைபாடுகூட நம்மில் பலருக்கு உண்டு. என்னை பொறுத்தவரை சீனாவின் தன்னிகரற்ற தலைவர் “மாவோ” சொன்னதுபோல் “நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்கிற கூற்றை ஒட்டித்தான் நான் விடுதலை புலிகள் என்கிற அமைப்பை பார்கிறேன்.

புலிகள் ஆயுதம் ஏந்தியதாகட்டும், சக போராட்ட குழுக்களை அழித்ததாக இருக்கட்டும், ஒற்றை தலைமை  என்கிற முடிவாகட்டும், அந்த இடத்தில்  நாம் இருந்தால்தான், நேரிடையாக பாதிக்கபட்டால்தான்  அங்கு எடுக்கப்பட்ட முடிவு சரியா..? இல்லை தவறா என்று வாதிட முடியும். ஒவ்வொரு முடிவுக்கு பின்னும் அது எடுக்க பட்ட சூழ்நிலையின் பின்னணியை சரியாக ஆராய்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால், அதில் மறைந்திருக்கும் உண்மையின் உக்கிரம், முடிவு அவர்கலுக்கு சரி என்பதாக தான் இருக்க முடியும்.

நோக்கம் நிறைவேறினால் போராட்டங்கள் அனைத்தும் சரித்திரமாக பார்க்க படும், அதில் எடுக்க பட்ட முடிவுகள் அனைத்தும் மிக சிறந்த ராஜதந்திர முடிவுகளாக பார்க்கப்படும். ஆனாலும் கூட அனைத்து முடிவுகளும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.

இந்திய படைகளை எதிர்த்து புலிகள் களமாடியபோதும், இந்திய வீரர் ஒருவர் மாண்டாலும்  சரி, நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போதும் சரி நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.


புலிகள் என்கிற  இயக்கம் இனி இல்லை என்கிற நிலை இன்று இருக்கிறது, நாம் இந்த கட்டுரையில் பார்க்கபோவது புலிகள் இயக்கம் சரியா..? இல்லையா..? என்பதை பற்றியோ, அவர்களது முடிவுகளை பற்றியோ அல்ல. சக தமிழனாக புலிகள் இயக்கத்தில் மிக பெரும் தாக்குதல்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற வீர தளபதிகளை பற்றி ஒரு பதிவை ஏர்படுத்த வேண்டும் என்கிற எனது எண்ணம் சரி என்று நினைக்கிறேன்...எனது இந்த எழுத்தும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல...


மனதை கவர்ந்த வீரன் 

அன்று செவ்வாய்கிழமை புலிகள் இயக்கத்தில் உயர்நிலை போராளிகள் அனைவரும் இன்று இந்த இயக்கம் ஒரு மாபெரும் இழப்பை சந்திக்கபோகிறது என்று தெரியாமல் தாங்கள் வழமையான பயிற்சிகளிலும், திட்டமிடுதலிலும்  நேரத்தை செலவிட்டார்கள்.

மதிய நேரம் பிற்பகல் 2:00 மணியளவில் தனி ஈழ கனவுகளை சுமந்துகொண்டு இயங்கிய ஒரு தன்னிகரில்லா இதயம் நின்றுபோனது. இயக்கத்தின் கடைநிலை வீரன் வரை கவலை கொள்ள வைத்த ஒரு மாபெரும் இழப்பு.  இன்னும் சொல்ல வேண்டும் என்றால்  எதற்கும் கலங்காத இயக்கத்தின் தலைவரும் கலங்கிதான் போனார். முழு இயக்கத்தையும் அசைத்துபார்த்த ஒரு  துக்க நிகழ்வு அது. 

எத்தனையோ  நாட்கள், எதிரியின் மீது  தாக்குதல்ககளுக்கு போகும் போது திரும்பிவருவது நிச்சயம் இல்லை என்று தெரிந்து முன்சென்ற இந்த வீர தளபதி, அனைத்திலும் வென்று உயிருடன் திரும்பினார் , இந்த ஒரு நாளை தவிர...

யார் அந்த வீரன் , அப்படி என்ன சாதித்தார்.. வாருங்கள் தோழர்களே ஒரு வீர தமிழனை பற்றி பார்ப்போம்...|



முல்லை தீவு மாவட்டத்தின் அழகான ஒரு கடற்கரை கிராமம். ஒருபக்கம் கடல் , மறுபக்கம் காடுகளும், வயல்வெளியும், தோப்புகளும் நிறைந்த ஒரு கிராமம் “கொக்குத்தொடுவாய்”. இங்கு  1965 ஆம் வருடம் நவம்பர் 27 ஆம் தேதி கந்தையா, கண்ணகி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக பிறந்தார். இவர் பிறந்த தினமே பால்ராஜ் ஒரு மிகபெரும் வீரனாக உருவாக போகிறான் என்பதை எடுத்துக்காட்டியது. (நவம்பர் 27-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினமாக புலிகள் அனுசரிகிரார்கள்) தந்தை தாய் இட்ட பெயர் பாலசேகரன். இயக்கம் அவருக்கு சூட்டிய பெயர் பால்ராஜ்.

தனது பள்ளிப்படிப்பை கொக்குத்தொடுவாயிலும் உயர் கல்வியை புல்மோடை என்னும் இடத்திலும் நிறைவுசெய்தார். இயற்கையாகவே பால்ராஜ் படிப்பில் கெட்டிக்காரர். அவரது குடும்பம் அவரை கல்லூரி படிப்புக்கு தயார் செய்யவேண்டும் என்கிற நினைவோடு இருந்தது.  அந்த கால கட்டங்களில்  தமிழர் சிங்களர் என்கிற பாகுபாடு கடற்கரை கிராமங்களில் கிடையாது. அங்குவரும் சிங்கள மீனவர்களிடம் சிங்கள மொழியை பேசுவதற்கு கற்று கொண்டார். இயற்கையாகவே படிப்பின் மீது இருந்த ஆர்வம் ஆங்கிலத்தையும் ஓரளவுக்கு பேசும் தகுதியை அவருக்கு கொடுத்தது. பல்கலை மாணவனாக வேண்டும் என்று அவரது குடும்பம் நினைத்தது.  ஆனால் தமிழர் உரிமைக்காக போராடும் ஒரு போராட்ட குழுவோடு இணைந்து தனது பங்களிப்பை செய்யவேண்டும் என்பதே பால்ராஜின் கனவாக இருந்தது.

பள்ளி பருவங்களில் வேட்டையாடுதல் என்கிற கலையில் தேர்ச்சிபெற்று, வேட்டையாடுவதற்கு முல்லைத்தீவு காட்டு பகுதி முழுவதும் சென்றாதால், அவர் கால்படாத தடமே இல்லை என்றானது.

வேட்டையாடுதல் என்பது அவ்வளவு இலகுவான ஒரு கலை அல்ல. மிகுந்த பயிற்சி வேண்டும். மிருகங்களை மிகுந்த பொறுமையுடன் திட்டமிட்டு வேட்டையாடவேன்டும். காலடி தடங்கள், மிருக வாடை, பறவைகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். மிருகங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை இப்படிதான் நடந்துகொள்ளும் என்று அவதானிக்க, மிருகங்களின் எதிர் வினைக்கு ஏற்ப அந்த நிமிடத்தில் திட்டத்தை மாற்றி புதிய தாக்குதல் திட்டமிட ஒரு கூரிய, பதற்றம் அடையாத  புத்தி வேண்டும். இவை அனைத்தும் இயற்கையாக பால்ராஜூக்கு இருந்ததனால் ஒரு வெற்றிகரமான வேட்டையனாக திகழ்ந்தார்.

 1982 ஆம் வருடங்களில்  “புளொட்” இயக்கத்தை சேர்ந்தவர்கள் சற்று சுறுசுறுப்பாக ஆட்கள் சேர்ப்பு பணியில் இயங்கி கொண்டிருந்தார்கள். எ
ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் வந்த  புளொட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்தவிதமான வீர தீர நடவடிக்கையும் (ACTION BLOCK)   இடம்பெற வில்லை என்பதே மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருந்தது.

1983-இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் மீண்டும் ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணவோட்டத்தை அதிகபடுத்தியது. அப்பொழுது பிரபலம் ஆக ஆரம்பித்த விடுதலை புலிகள் இயக்கம் அவரை கவர்ந்தது. புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். ஆனாலும் புளொட் பின்புலம் புலிகளால் அவரை சற்று ஐயத்துடனே பார்க்கவைத்தது.

ஐயம் தெளிந்ததா? இந்த வீரன் என்ன செய்தான்...வரும் வாரங்களில் பாப்போம் தோழர்களே..!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...